''ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு, அடுத்தாண்டு, இலவச ஷூக்கள் வழங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:பள்ளிக்கல்வித் துறை மூலம், முதல் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை, பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறோம். தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக, இந்த அரசு உள்ளது.
இதன்படி, ஆறு முதல், பிளஸ் 2 வரை, மாணவ - மாணவியர் அனைவருக்கும், அடுத்தாண்டு முதல், இலவச ஷூக்கள் வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்பறையும், செப்., 15க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.அரசு பள்ளி மாணவர்கள், சரளமாக ஆங்கிலம் கற்க, நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். விரைவில் நான்காவது கட்டமாக, 'லேப்டாப்' வழங்கும் பணி துவங்க உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.