WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 26, 2024

சிபிஎஸ்இ 3, 6-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்.

மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளின் 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட உள்ளது. சிபிஎஸ்இ 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை சிபிஎஸ்இ பள்ளிகளிடம் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சிபிஎஸ்இ இயக்குநா் ஜோசப் இமானுவல் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு வரை என்சிஇஆா்டி வெளியிட்ட பாடநூல்களுக்குப் பதிலாக, 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு என்சிஇஆா்டி வெளியிட உள்ள புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களைப் பின்பற்றுமாறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளின் வேறு எந்த வகுப்புக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தாா்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.