WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 23, 2026

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 25-ம் தேதி முதல் தொடக்கம்.

 

​தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீர​பாண்டி ஆகிய 7 இடங்​களில் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன.

இந்த கல்​லூரி​களில் ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட கால்​நடைமருத்​து​வம் மற்​றும் பராமரிப்பு படிப்​புக்கு (பி.​வி.எஸ்​சி. - ஏ.ஹெச்) 660 இடங்​கள் இருக்​கின்​றன. இதில், அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு இடங்​கள் 15 சதவீதம் ஒதுக்​கப்​படு​கின்​றன. திரு​வள்​ளூர் மாவட்​டம் கோடு​வேளி​யில் உள்ள உணவு மற்​றும் பால்​வளத் தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 60 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் இருக்​கின்​றன. இதில், உணவுத் தொழில்​நுட்ப படிப்​பில் 6 இடங்​கள் மற்​றும் பால்​வளத் தொழில்​நுட்ப படிப்​பில் 3 இடங்​கள் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு ஒதுக்​கப்​படு​கிறது.

இதே​போல், ஓசூர் மத்​தி​கிரி​யில் உள்ள கோழி​யின உற்​பத்தி மற்​றும் மேலாண்​மைக் கல்​லூரி​யில் கோழி​யின தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், உணவு தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. அதே​போல், சேலம் மாவட்​டம் தலை​வாசல் பகு​தி​யில் உள்ள இணைப்பு கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் இருக்​கின்றன இந்த 3 பி.டெக் பட்​டப்​படிப்​பு​களும் 4 ஆண்​டு​கள் கொண்​டது.

இந்​நிலை​யில், பி.​வி.எஸ்​சி- ஏ.ஹெச் மற்​றும் பி.டெக் படிப்​பு​களுக்கு 2026- 27-ம் கல்​வி​யாண்டு மாணவர் சேர்க்​கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது. ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். அயல்​நாடு வாழ் இந்​தி​யர், அயல்​நாடு வாழ் இந்​தி​யரின் வாரிசுகள், அயல்​நாடு வாழ் இந்​தி​யரின் நிதி ஆதரவு பெற்​றோர் மற்​றும் அயல்​நாட்​டினர் ஆகியோருக்​கான இடஒதுக்​கீடு, இணை​யதள விண்​ணப்ப வழி​முறை​கள் மற்​றும் இதர விபரங்​களை​யும் இணை​யதளத்​தில் பார்த்து அறிந்து கொள்​ளலாம்.

இந்த படிப்​பு​களுக்கு பிளஸ்2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது என்று தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது. மேலும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்கு பி.​வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்​றும் பி.டெக் படிப்​பு​களில் 100-க்​கும் மேற்​பட்ட இடங்​கள்​ ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.