WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 22, 2026

வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்.

 

பொதுத் தேர்​வு​களில் வட மாவட்​டங்​களில் தேர்ச்சி சதவீதத்தை அதி​கரிக்​கும் வித​மாக கல்​விப் பணி​கள் தீவிரப்​படுத்​தப்​படும் என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​களுக்கு வாழ்த்​துக்​கள். எதிர்​பார்த்த மதிப்​பெண் கிடைக்​காத மாணவர்​கள் சோர்ந்​து​வி​டா​மல் அடுத்​தகட்​டத்தை நோக்கி பயணிக்க வேண்​டும். தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் இடைநிற்​றலை குறைக்க பல்​வேறு நடவடிக்​கைகள் முன்​னெடுக்​கப்​படும்.

சமூக, பொருளா​தார, தனி​நபர் காரணங்​களுக்​காக பள்​ளிக்கு வரா​விட்​டால் உடனே அந்த மாணவரின் வீட்​டுக்கே சென்று பள்​ளிக்கு வரவைக்க முயற்சி மேற்​கொள்​வோம். மெல்​லக் கற்​கும் மாணவர்​கள் மீது கூடு​தல் கவனம் செலுத்தி அவர்​களை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்ல அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

பள்​ளிக் கல்​வித் துறை​யில் கடந்த காலங்​களில் கொண்​டு​வரப்​பட்ட திட்​டங்​கள் தொடரும். ஆசிரியர்​களின் ஒத்​துழைப்பு இல்​லாமல் நாம் அடுத்​தகட்​டத்​துக்​குச் செல்ல முடி​யாது. ஆசிரியர்​கள் காலிப் பணி​யிடங்​கள் குறித்து நீதி​மன்​றத்​தில் சில வழக்​கு​கள் உள்​ளன.இந்த பிரச்​சினைக்கு நல்ல வழிபிறக்​கும்.

பொதுத் தேர்​வு​களில் வட மாவட்​டங்​களில் தேர்ச்சி சதவீதத்தை அதி​கரிக்​கும் வித​மாக கல்​விப் பணி​கள் தீவிரப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார். நேற்று வெளியான பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்​சி​யில் திரு​வண்​ணா​மலை, கிருஷ்ணகிரி, விழுப்​புரம் உள்​ளிட்ட வடமாவட்​டங்​களே கடைசி 10 இடங்​களில் உள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.