WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 9, 2026

ஆசிரியர் பதவி உயர்வுக்கு ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை செயலர் விளக்கம்.

 

அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர்​கள் பதவி உயர்​வுக்கு `டெட்' தேர்ச்சி கட்​டா​யம் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் சந்​திரமோகன் விளக்​கம் அளித்​துள்​ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான பணி நியமன விதி​முறை​கள் தொடர்​பான 7 அரசாணை​களை கடந்த ஜூன் 3-ம் தேதி​யிட்ட தமிழக அரசிதழில் பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டது. அதில், இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர்​களின் பணி நியமனம், பதவி உயர்​வுக்கு டெட் தேர்ச்சி கட்​டா​யம் என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஆனால், உயர்​நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலைப் பட்​ட​தாரி ஆசிரியர் பதவி உயர்​வுக்கு டெட் தேர்ச்சி கட்​டா​யம் என்​பது நேரடி​யாக குறிப்​பிடப்​பட​வில்​லை. இதனால், ஆசிரியர்​கள் குழப்​பம் அடைந்​தனர்.

இந்​நிலை​யில், டெட் தேர்ச்சி தொடர்​பாக பள்​ளிக்​கல்​வித்துறை செயலர் ப.சந்​திரமோகன் நேற்று தெரி​வித்​துள்​ள​தாவது: அரசுப் பள்ளி ஆசிரியர்​களின் பணி விதி​கள் தொடர்​பாக அரசிதழில் அறிவிக்​கைகள் வெளி​யிடப்​பட்​டன. அதில் ஒரு சில அறிவிக்​கைகள், ஆசிரியர்​களின் பதவி உயர்​வுக்கு டெட் தேர்ச்சி அவசி​ய​மா, இல்​லையா என்ற குழப்​பத்தை ஆசிரியர்​களிடம் ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக தெரி​கிறது.

டெட் தேர்ச்சி தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பு நகல் இன்​னும் கிடைக்​கப் பெறாத நிலை​யில், ஆசிரியர் பணி நியமன விதி​முறை​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. அஞ்​சுமன் இஷாத் இ தாலீம் அறக்​கட்​டளை - மகா​ராஷ்டிர அரசு இடையி​லான வழக்​கில், கடந்த மே 29-ம் தேதி உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய மறு ஆய்வு தீர்ப்​பின்​படி, டெட் தேர்ச்சி கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, ஆசிரியர்​களின் பதவி உயர்​வுக்​கும் டெட் தேர்​ச்சி கட்​​டா​யம் என்​பது தெளி​வாக்​கப்​படு​கிறது. இவ்​​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.