'தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக, துணைவேந்தர் இல்லாமல் செயல்படும், 14 பல்கலைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர, என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என, விளக்கம் அளிக்க, உயர்கல்வித் துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'அண்ணாமலை பல்கலைக்கு நிரந்தர துணைவேந்தர் இல்லை. ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான குழுவால், பல்கலை நிர்வகிக்கப்படுகிறது. பல நடைமுறை சிக்கல்களை, பதிவாளர் எதிர்கொள்கிறார்' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஏற்கனவே, மதுரை காமராஜர் பல்கலை தொடர்பான வழக்கில், துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கும், 14 பல்கலைகளில் முக்கிய முடிவுகள், எப்படி எடுக்கப்படுகின்றன என்பது குறித்து, அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக குழு, பல்கலை மற்றும் இணைப்பு பெற்ற கல்லுாரிகளை நிர்வகிக்க சாத்தியமில்லை. எனவே, நான்கு ஆண்டுகளாக, இதே நிலையில் பல்கலைகள் செயல்படுவது, கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தில், மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தின் உயர்கல்வியில், குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இவ்வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை செயலரை, எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.
கடந்த நான்கு ஆண்டுகளாக துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் 14 பல்கலைகளை, இயல்பு நிலைக்கு கொண்டு வர, மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது குறித்து, உயர்கல்வித் துறை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும். செயலர் சார்பில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.