WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 20, 2014

Data Entry Operator பணி: SSC அறிவிப்பு




அனைத்து இந்திய ஓபன் போட்டி தேர்வு மூலம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Staff Selection Commission (SSC) வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: 
1997
தேர்வு: 
ஒருங்கிணைந்த மேல்நிலைப்பள்ளி லெவல் (10 +2) தேர்வு, 2014
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
1 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 1006
2 லோயர் டிவிஷன் கிளார்க் - 991
கல்வித்தகுதி: 
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 
01.08.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு  எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலமும், லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100.  SC, ST,மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: 
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 
14.08.2014
தேர்வு நடைபெறும் தேதி: 
11.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/notice/examnotice/CHSLE-2014%20%20Notice%20E.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.