Thursday, January 9, 2025
விக்யான் பயன் இந்த ஆண்டின் " சிறந்த இருதயவியல் மருத்துவர்" என்ற விருதினை டாக்டர் அரவிந்த குமார் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி கௌரவித்தது.
புது தில்லி, டிசம்பர் 19, 2024 - புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சாதனையாளர்களை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் நிகழ்வான "அட்டல் சாதனையாளர் விருதுகள் 2024" என்ற விழாவில் டாக்டர் அரவிந்த் குமார் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த ஆண்டின் "இருதயநோயினை திறம்பட கையாளும் சிறந்த இருதயவியல் மருத்துவர்" என கௌரவிக்கப்பட்டார்.
இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர் ஸ்ரீ டோகன் சாரீ மற்றும் இந்திய திரைப்பட நடிகை திருமதி காஜல் அகர்வால் அவர்களால் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள்:
ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான், விவசாயம், விவசாயிகளின் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்.ஸ்ரீ சிராக் பாஸ்வான், உணவு பதப்படுத்தல் தொழில்களின் கேபினட் அமைச்சர்.
இருதயவியல் மருத்துவத் துறையில் டாக்டர் அரவிந்த் குமார் ராதாகிருஷ்ணன் அவர்களின் நோயாளிகள் பராமரிப்பு, அர்ப்பணிப்பு, புதுமையான சிகிச்சை முறைகள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி ஆகியவை மருத்துவத் துறையில் அளவுகோலாக அமைந்துள்ள சிறந்த பங்களிப்பு மற்றும் முன்னேற்றங்கள் இந்த பாராட்டு விழாவில் அங்கீகரிக்கப்பட்டது.
டாக்டர் அரவிந்த் அவர்கள் தனது நன்றியுரையில் "எனது குழுவின் கூட்டு முயற்சிக்கும் என் வழிகாட்டிகள் மற்றும் குடும்பத்தினரின் அசைக்க முடியாத ஆதரவிற்கும் சான்றான இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த விருது மருத்துவத் துறையின் உயிரைக் காப்பாற்றும் யுக்திகளைக் கண்டுபிடிக்கும் திறனை மேம்படுத்த உதவுமென நம்புகிறேன்" என்றார்.
"அட்டல் சாதனையாளர் விருதுகள் 2024" சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் நோக்கில் டாப்நாட்ச் (Topnotch) அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
டாக்டர் அரவிந்த் குமார் ராதாகிருஷ்ணன் அவர்களின் "இருதயநோயினை திறம்பட கையாளும் சிறந்த இருதயவியல் மருத்துவர்" என்ற அங்கீகாரமானது இருதயவியல் மருத்துவத் துறையில் அவரது முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மட்டுமல்லாமல் அவரது உறுதிப்பாடான இருதயவியல் மருத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பது மற்றும் காலதாரி பராமரிப்பில் சிறந்து விளங்குவதற்கான நெறிமுறைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Wednesday, January 8, 2025
Sunday, January 5, 2025
மாணவர்களே சேராத 496 பள்ளிகளில் 889 ஆசிரியர்கள் இருப்பது ஏன்?
தமிழகத்தில், 2,758 ஓராசிரியர் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் நியமித்து மேம்படுத்த வேண்டும்' என, விடுதலை சிறுத் தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.
‘சிடெட்' தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Saturday, January 4, 2025
பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை!
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜன.,17ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்திருப்பதன் மூலம், பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவைக்கேற்ப 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Thursday, January 2, 2025
பாடப் புத்தகமா, பயிற்சி கையேடா? - குழப்பத்தில் 1-5 மாணவர்கள், ஆசிரியர்கள்!
அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாடப் புத்தகங்களை படிப்பதா, இல்லை பயிற்சி கையேடுகளை படிப்பதா என குழப்பத்தில் உள்ளனர். அதேபோல் ஆசிரியர்களும் எதை கற்பிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்குவதற்காக 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Monday, December 30, 2024
பிஎச்.டி., நுழைவுத்தேர்வு முறைகேடு விசாரணை குழுவில் மரபு மீறல் மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள் குற்றச்சாட்டு.
'மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் சிண்டிகேட் உறுப்பினர் இடம் பெறாதது மரபு மீறல்' என பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
175 அரசு மேல்நிலை பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள்: ரூ.58 கோடியில் அமைகிறது.
தமிழகத்தில் 175 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் வரும் 2024-25-ம் கல்வியாண்டில் ரூ.57.80 கோடி மதிப்பில் நவீன கணினி அறிவியல் ஆய்வங்கள் அமைக்கப்படவுள்ளன.
Wednesday, December 25, 2024
Tuesday, December 24, 2024
பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.
பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய கல்வித் துறை ரத்து செய்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது மத்திய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறைந்தபட்ச கற்றல் ஏடுகள் வழங்கப்படுமா?
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேல்நிலை வகுப்பு பாடங்கள் எளிமையாகவே இருந்து வந்தன. நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சமீப காலமாக மேல்நிலை வகுப்புகளின் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் பாட நூல்களில் கடினமான பாடப் பகுதிகள் சேர்க்கப்பட்டன. மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பயன் தரும் என்று கருதி இவ்வாறு செய்கின்றனர். எளிய முறையில் பாடங்களைப் படித்து, பிற தொழில்சார் கல்வி மற்றும் பிற உயர்கல்வியை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு இந்த பாட சேர்ப்பு கடினமாகி விடுகிறது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தகுதித் தேர்வை நடத்த டிஆர்பி-க்கு அனுமதி.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தகுதித்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு (டிஆர்பி) அனுமதி அளித்து தமிழக உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
Monday, December 23, 2024
பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்
வட்டார கல்வி அதிகாரி பதிவி உயர்வுக்கான கவுன்சிலிங் டிச., 26ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தாண்டி ஜன.,1 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து வட்டாரக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு டிச.,26 ஆன்லைன் மூலம் நடக்கும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)