புது தில்லி, டிசம்பர் 19, 2024 - புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சாதனையாளர்களை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் நிகழ்வான "அட்டல் சாதனையாளர் விருதுகள் 2024" என்ற விழாவில் டாக்டர் அரவிந்த் குமார் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த ஆண்டின் "இருதயநோயினை திறம்பட கையாளும் சிறந்த இருதயவியல் மருத்துவர்" என கௌரவிக்கப்பட்டார்.
இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர் ஸ்ரீ டோகன் சாரீ மற்றும் இந்திய திரைப்பட நடிகை திருமதி காஜல் அகர்வால் அவர்களால் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள்:
ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான், விவசாயம், விவசாயிகளின் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்.ஸ்ரீ சிராக் பாஸ்வான், உணவு பதப்படுத்தல் தொழில்களின் கேபினட் அமைச்சர்.
இருதயவியல் மருத்துவத் துறையில் டாக்டர் அரவிந்த் குமார் ராதாகிருஷ்ணன் அவர்களின் நோயாளிகள் பராமரிப்பு, அர்ப்பணிப்பு, புதுமையான சிகிச்சை முறைகள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி ஆகியவை மருத்துவத் துறையில் அளவுகோலாக அமைந்துள்ள சிறந்த பங்களிப்பு மற்றும் முன்னேற்றங்கள் இந்த பாராட்டு விழாவில் அங்கீகரிக்கப்பட்டது.
டாக்டர் அரவிந்த் அவர்கள் தனது நன்றியுரையில் "எனது குழுவின் கூட்டு முயற்சிக்கும் என் வழிகாட்டிகள் மற்றும் குடும்பத்தினரின் அசைக்க முடியாத ஆதரவிற்கும் சான்றான இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த விருது மருத்துவத் துறையின் உயிரைக் காப்பாற்றும் யுக்திகளைக் கண்டுபிடிக்கும் திறனை மேம்படுத்த உதவுமென நம்புகிறேன்" என்றார்.
"அட்டல் சாதனையாளர் விருதுகள் 2024" சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் நோக்கில் டாப்நாட்ச் (Topnotch) அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
டாக்டர் அரவிந்த் குமார் ராதாகிருஷ்ணன் அவர்களின் "இருதயநோயினை திறம்பட கையாளும் சிறந்த இருதயவியல் மருத்துவர்" என்ற அங்கீகாரமானது இருதயவியல் மருத்துவத் துறையில் அவரது முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மட்டுமல்லாமல் அவரது உறுதிப்பாடான இருதயவியல் மருத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பது மற்றும் காலதாரி பராமரிப்பில் சிறந்து விளங்குவதற்கான நெறிமுறைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.