WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 23, 2014

போலி சுற்றறிக்கை யு.ஜி.சி., அறிவிப்பு

'நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில், இணை பேராசிரியர், உதவி
பேராசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியான சுற்றறிக்கை போலியானது' என, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை, 15ம் தேதி, எம்.பில்., - பி.எச்டி., மற்றும் எம்.டெக்., படிப்புகளை நடத்தும், அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை, திறந்தநிலை மற்றும் மத்திய பல்கலைகளில், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பதவி உயர்வு, நியமனம் தொடர்பாக, யு.ஜி.சி., பெயரில், தோரத் என்பவர் வெளியிட்டதாக, ஒரு சுற்றறிக்கை வெளியாகியிருந்தது. இந்த சுற்றறிக்கை, சில பல்கலைகள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. 'இந்த சுற்றறிக்கை போலியானது. இதற்கு எவ்வித அங்கீகாரமும் கிடையாது' என, யு.ஜி.சி., தற்போது அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.