டி.என்.பி.எஸ்.சி பொது சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய துளைப்பொறி இயக்குபவர் பணிக்கான 25 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வை நடத்தியது.
இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவை அடிப்படையில் தாற்காலிக நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் கலந்து கொண்டவர்களின் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் ""www.tnpsc.gov.in'' என்ற இணைய தளத்தில் வியாழக்கிழமை (ஆக.21) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.