WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 23, 2014

 ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவில் உள்ள குறைகளை சரிசெய்ய வாய்ப்பு!!தேனி மாவட்டம்.

இணையத்தில் ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்ததில் ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை அவர்களே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளவும், பதிவினை புதுப்பித்து கொள்ளவும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவுதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள பதிவு விவரங்களில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரியவருகிறது.
எனவே 
www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவு அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து குறைபாடு ஏதுமிருப்பின் பதிவிறக்கம் செய்து, அந்த ‘பிரின்ட் அவுட்’ குறைபாடுகளுக்குரிய சான்றிதழ்கள் குடும்ப அடையாள அட்டை மற்றும் சாதி சான்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலவலகத்தில் நேரில் சென்று சரி செய்து கொள்ளலாம். தற்போது சிறப்புநேர்வாக பி.எஸ்சி.,(கணினி அறிவியல்), பி.எஸ்சி.,(தகவல்தொழில்நுட்பம்) மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்புடன் பட்டதாரி ஆசிரியர் தகுதியை பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அனைவரும் இம்மாதம் 23 மற்றும் 24 ம் தேதிகளில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து தங்களது பதிவு விவரங்களை சரி செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.