WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 15, 2015

ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு!!

பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம்:
* பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்து, ஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும்
* அதில், குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால், வட்டார வள மைய அதிகாரி தலைமையிலான, வட்டார கமிட்டி விசாரித்து, 30 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்
* அதற்கு மேல், கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் மாவட்ட கமிட்டி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ஆசிரியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* இறுதியாக, மாநில அளவில், தொடக்கக் கல்வி இயக்குனரை தலைவராக கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, குறைகளை தீர்த்து வைக்க வேண்டும்
* ஆசிரியரின் பணி விதிமுறைகள், பதவி உயர்வு, நிதி சார்ந்த கோரிக்கைகள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை தொடர்பான குறைகளை, இந்தக் கமிட்டிகள் விசாரிக்காது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த உத்தரவால், எந்த பலனும் ஏற்படாது என, ஆசிரியர்கள் குறை கூறிஉள்ளனர். இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:ஏற்கனவே, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தில், கிராம கல்விக் குழு என்ற குறை தீர்ப்பு கமிட்டி இருக்கிறது; ஆனால், அது முறையாக செயல்படவில்லை என்ற குறையே இன்னும் போக்கப்படவில்லை. பணி விதிமுறைகள், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை ஆய்வு செய்யாமல், ஆசிரியர்களின் குறைகளை எப்படி தீர்க்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.