மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய பாடத் திட்டங்களின் படி, செயல்வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில்
ஓவியம், இசை, தையல், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தனித்திறன்களுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
இதை பயிற்றுவிக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, அதிக அளவில் கலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். கலை ஆசிரியராக விரும்புவோர், பிளஸ் 2 முடித்து, தமிழக அரசின் தேர்வுத் துறை நடத்தும் தொழில்நுட்ப தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். பின், அவர்கள்,
டி.டி.சி., எனப்படும் மூன்று மாத ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்து, சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் படிப்பு, 2007ம் ஆண்டு வரை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மாவட்ட வளாகங்களில், பள்ளிக் கல்வித் துறையால் நேரடியாக நடத்தப்பட்டன. ஆனால், 2007க்கு பின், ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடக்கப்பட்டுள்ளது. அதனால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதிகள் இருந்தும், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.