பொது தேர்வுகளில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில், மாநிலத்தில்
முதலிடம் பிடிக்க, ஈரோடு மாவட்ட கல்வித்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வுகளில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில், மாநிலத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே, ஈரோடு மாவட்ட கல்வித்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் தான் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, ஈரோடு மாவட்டமும், தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கி உள்ளது. மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஈரோடு கல்வி மாவட்டம், எஸ்.எஸ்.எல்.சி.,யை பொறுத்தவரை, 2013ல், 95.36 சதவீதம் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம், 2014ல், 97.88 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம், 2015ல், 98.04 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. இதே போல் பிளஸ் 2 தேர்வில், 2013ல், 94.28 சதவீதம் பெற்று மாநிலத்தில் ஐந்தாவது இடம், 2014ல், 97.05 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம், 2015ல், 96.06 சதவீதம் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றது.
இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: கடந்த, 2011, 2012ம் ஆண்டுகளில் வெறும், 93 சதவீதம் தேர்ச்சியே கிடைத்தது. அதன் பின்னர் படிப்படியாக முதலிடத்தை நோக்கி வந்துள்ளது. மெல்ல கற்கும் மாணவ, மாணவிகளுக்கு தினமும் மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. ஸ்பான்சர்கள் மூலம் அனைத்து பாடங்களுக்கும் ஆன மாதிரி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாட திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. தற்போது, திருப்புதல் பயிற்சி தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடத்துக்கு, ஈரோடு மாவட்டம் தள்ளப்பட்டது.
வணிகவியல், வரலாறு, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்ததே இதற்கு காரணம். எனவே, இந்தாண்டு குறிப்பிட்ட அப்பாட பிரிவுகள் மட்டுமின்றி அனைத்து பாட பிரிவுகளிலும் மாணவர்கள் எளிதில் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக பாடங்களை நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தாண்டு, பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அலுவலர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.