தொடக்கக் கல்வித்துறையின் கீழ், துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி
பயின்று ஊக்க ஊதியம் கோரியவர்களின் இறுதிப்பட்டியல், ஜன., 12க்குள்
அனுப்ப, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ், உயர்கல்வி படிக்க ஆசிரியர்கள் முன் அனுமதி பெறவேண்டியது அவசியம். உயர்கல்விக்கு ஏற்ப, தகுதியின் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, முன் அனுமதி பெறாமல் படித்து விண்ணப்பித்துள்ளவர்களின் பட்டியல்களும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பட்டியலில் உள்ளவர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே, விடுபட்ட ஒரு சில ஆசிரியர்களின் பெயர்களை இணைத்து, தொகுத்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், விடுபட்ட ஆசிரியர்களின் விபரங்கள் கோரி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்
பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.