மதுரையில் அரசுப் பள்ளிகளில் முகநுால் பயன்படுத்தும் மாணவர்கள் அடிமைகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.மாநில அரசின் மனநல
திட்டத்தின் மூலம் கடந்தாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் ஒன்பது, பத்து மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி மற்றும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.
மாணவிகளுக்கு குடும்ப பிரச்னை அதிகம் இருப்பதாக கவுன்சிலிங்கில் தெரிவிக்கும் அதேநேரத்தில் மாணவர்கள் முகநுால் அடிமைகளாக மாறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
மனநல திட்ட டாக்டர் சிவசங்கரி கூறியது: ஒன்பதாம் வகுப்பில் இருந்தே இப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். இம்மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வெழுத முடியாமல் தவிக்கின்றனர். பள்ளிகளில் அலைபேசி கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் விளையாடுவதில்லை.
அலைபேசியில் முகநுால் மூலம் மணிக்கணக்கில் 'சாட்டிங்' செய்கின்றனர். இதுவரை பத்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்துள்ளோம். சில மாணவர்களின் பெற்றோர்களிடம் பிரச்னையை முழுமையாக தெரிவித்து மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவில் சிகிச்சை அளித்துள்ளோம். அதிக ஆர்வம், கோளாறால் முகநுாலை பார்க்கும் மனநிலையை மருந்துகளின் மூலம் மாற்றி வருகிறோம். பெற்றோர்கள் இவ்விஷயத்தில் பிள்ளைகளிடம் கூடுதல் செலுத்தினால் தான் அடிமை நிலையில் இருந்து மீட்க முடியும், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.