பிளஸ் 2 கற்றல் கையேடு புத்தகத்தில், முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி
அடைந்துள்ளனர். பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், முக்கிய கேள்விகள் அடங்கிய, குறைந்தபட்ச கற்றல் கையேடு புத்தகத்தை, தமிழக கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் உள்ள கேள்விகளை படித்தால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும் என, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பால் பள்ளிகளில் பாடம் நடத்துவது ஒரு மாதம் வரைபாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, குறைந்தபட்ச கற்றல் கையேடு Advertisement புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இதில், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் புத்தகத்தின் முன், பின் அட்டைகளில் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.