கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2011 ஜன.,1 க்குப்பின், தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியமான 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும்.ஆனால் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களான சிலருக்கு அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாய் சேர்த்தது போக, மீண்டும் தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனருக்கு புகார் சென்றது.இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவு:இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் 750 ரூபாயை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளலாம். மேலும் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும். அதன்பின் தனி ஊதியமாக 750 ரூபாய் வழங்க கூடாது. ஏற்கனவே வழங்கியவர்களுக்கு அவற்றை ஊதியத்தில் பிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.