19ல் நடக்கும், 'குரூப் - 1' தேர்வில், தமிழக முதல்வர் குறித்து கேள்விகள் இடம்பெறுமோ என, தேர்வர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அரசு துறைகளில், 29 துணை ஆட்சியர்கள் உட்பட காலியாக உள்ள, 85, 'குரூப் - 1' பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, வரும், 19ல் நடக்கிறது. இதற்காக, 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, நேற்று முன்தினம் முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; என்னென்ன கேள்விகள் இடம்பெறும் என, 'குரூப் - 1' தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில், டிசம்பருக்கு முன் ஒரு முதல்வர், பின், மற்றொரு முதல்வர், தற்போது யாரென்றே தெரியாத நிலையில், இது குறித்த கேள்வி இடம்பெற்றால் என்ன பதில் எழுவதென தெரியாமல், தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.