WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 23, 2017

2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்.

தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முறைப்படி நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அல்லது நான்கு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். இதற்காக அரசுக்கு 10 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகும், என கூறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை அரசு செயலர் உதயசந்திரன் இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.