பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அரசாணை வெளியிடும் முன், மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சீர்திருத்த நடவடிக்கைகளில், முக்கிய அம்சமாக, தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
வல்லுனர் கமிட்டி
மேலும்,தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ்1 பொது தேர்வு, பாடத்துக்கு, 200 மதிப்பெண்களுக்கு
பதில், 100 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு உள்ளது.தேர்வு நேரமும், இரண்டரை மணி நேரமாக மாற்றப்பட்டு உள்ளது. இதே முறை, அடுத்த ஆண்டு, பிளஸ் 2 மாணவர் களுக்கும் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், புதிய தேர்வு முறையில், வினாத் தாள் முறை மற்றும் தேர்வு விதிகளை உருவாக்க, தமிழக அரசின் சார்பில் வல்லுனர் கமிட்டி அமைக் கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளியை ஒருங் கிணைப்பாளராகவும், தேர்வுத் துறை முன்னாள் இயக்குனர் தேவராஜனை, தலைவரா கவும் நியமித்து, கமிட்டி அமைக்கப்பட்டது.
புதிய வினாத்தாள்
இந்த கமிட்டி, பல்வேறு பாடத்திட்ட வினாத்தாள் வகைகள், ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா பொதுத் தேர்வு முறை, சி.பி.எஸ்.இ.,பாடத்திட்ட வினாத்தாள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புதிய விதிகளை வகுத்துள்ளது.
இந்த அறிக்கையை, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரனிடம், வல்லுனர் கமிட்டி தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் முறைக்கு, தமிழக பள்ளிக்கல்விதுறை சார்பில், விரைவில் அரசாணை வெளியிடப்பட
உள்ளது.அதற்கு முன், புதிய வினாத்தாள் முறையின் படி, மாதிரி வினாத்தாள் வடிவ மைத்து, தற்போது, பிளஸ் ௧ முடித்து, பிளஸ் 2 படிக்கும் சில மாணவர்களுக்கு, மாதிரி தேர்வு நடத்தப் பட உள்ளது.
புதிய முறையில் மாணவர் கள் தேர்வு எழுதும் நேரம், அவர்களின் சிந்திக்கும் திறன், ஒவ் வொரு கேள்விக்கும் விடை எழுத தேவைப் படும் நேரம் ஆகியவற்றை, செய்முறை ஆய்வு மூலம் முடிவு செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.