WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 28, 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; வரியை குறைக்க அரசு ஆலோசனை!!

பெட்ரோல், டீசல் மீதான விலையில், ஒரு ரூபாய் வரை குறைக்க, தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள், தினசரி மாற்றி அமைக்கின்றன. இதன்படி, 43 நாட்களில், பெட்ரோல் விலை, 40 முறையும், டீசல் விலை, 35 முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

டீலர் கமிஷன்:

சென்னையில், நேற்று பெட்ரோல் விலை, 15 காசு உயர்ந்து, 86.28 ரூபாய்க்கும், டீசல், 13 காசு உயர்ந்து, 78.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழககத்தில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது: பெட்ரோல், டீசலின் அடிப்படை விலையில், மத்திய கலால் வரி இணைகிறது. பெட்ரோலுக்கு, 19.50 ரூபாயும், டீசலுக்கு, 15.33 ரூபாயும், கலால் வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், தமிழக அரசின், 'வாட்' எனும் மதிப்பு கூட்டு வரியும் சேர்க்கப்படுகிறது. இதில், பெட்ரோலுக்கு, 34 சதவீதமும், டீசலுக்கு, 25 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், 'டீலர் கமிஷன்' சேர்ந்து, அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போது, விலை தொடர்ந்து உயர்வதால், வாட் வரியிலிருந்து, அதிகபட்சம், 2 சதவீதம் வரை குறைக்க, அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

எதிர்பார்ப்பு:

இதன் படி, பெட்ரோல் வரி, 32 சதவீதமாகவும், டீசல் வரி, 23 சதவீதமாகவும் குறையும். இதன் அடிப்படையில், அதிகபட்சம், 1.20 காசு வரை, விலை குறையும். இதனால், தமிழக அரசுக்கு, பெட்ரோல் வருவாயில் மாதத்துக்கு, 30 கோடி ரூபாயும்; டீசல் வருவாயில், மாதத்துக்கு, 60 கோடி ரூபாய் வரையும், இழப்பு ஏற்படும். இது தொடர்பான ஆலோசனையில், அரசு ஈடுபட்டு உள்ளது. விரைவில், அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கலாம். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.