WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 11, 2020

பொதுத்தேர்வு பாடம் சார்ந்த சந்தேகங்களுக்கு மாணவர்கள் விளக்கம் பெற நடவடிக்கை.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் பாடம் சார்ந்த சந்தேகங்களுக்கு 1 4 4 1 7 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறையின் கல்வி தகவல் மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் கல்வி தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் 24 மணி நேரமும் பாடம் சார்ந்த மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வுகள் நடைபெறுவதையொட்டி, அத்தேர்வுக்கு தயாராகும் மாணவ- மாணவிகளுக்கு உதவும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தாங்கள் பயிலும் பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் 1 4 4 1 7 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு துறை சார்ந்த ஆசிரியரிடம் விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.