WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 16, 2024

SSC- ஆண்டு அட்டவணை வெளியீடு.. மகிழ்ச்சிக் கடலில் தேர்வர்கள்..!!!

மத்திய அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்பும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இது தேர்வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) என்பது இந்திய அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது ஒரு தலைவரையும், இரண்டு செயலாளர்களைக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்திய அரசின் கெஜட் பதிவில்லாத பிரிவு பி மற்றும் பிரிவு சி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிற்து.

மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இத்தேர்வாணையம் செயல்படுகிறது.

ஆண்டுத் தேர்வு அட்டவணை



பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் பல்வேறு பதவிகளுக்குமான தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகின்றனர்.



இந்நிலையில்தான் தற்போது 2024 - 25 ஆம் ஆண்டுக்கான தற்காலிக வருடாந்திர அட்டவணையை எஸ்எஸ்சி (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அட்டவணையின் படி கிரேடு சி ஸ்டானோகிராஃபர் துறைக்கான போட்டி ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வு குறித்த விளம்பரங்கள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வுகள் டிசம்பர் 2024 மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு தேர்வுகளுக்கான தற்காலிக அறிவிப்புகளும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளதால் அதற்காகக் காத்திருந்த தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தேர்வு அட்டவணையைப் பார்த்து அதற்கேற்ப தயாராகும் வகையில் அவர்கள் தங்கள் தேர்வுத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.