WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 2, 2024

பிப்ரவரி 4-ல் டெட் தேர்வு இறுதிக் கட்டத் தயாரிப்பில் ஆசிரியர்கள்.

 வரும் பிப்ரவரி 4-ம் தேதி டெட் (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடைபெறவுள்ளதால் இறுதிக் கட்டத் தயாரிப்பில் ஆசிரியர்கள் மும்முரமாக உள்ளனர். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு வரும் (பிப்.4) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மேற்கொண்டு வருகிறது.


ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) என்பது இந்தியாவில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 1 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அந்தச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதற்கும் செல்லுபடியாகும். ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2011-ல் இந்திய அரசால் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னாதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டது

ஆக, அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இதற்காக கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அளவில் நாடு முழுவதும் (காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (National Council for Teacher Education# NCTE) வழிக்காட்டுகிறது.

அந்த வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து மத்திய ஆட்சிப் பகுதிகளும் பின்பற்ற வேண்டும். ஆண்டுக்கொருமுறை அனைத்து மாநிலங்களின் கல்வி செயலர்களும் தகுதித் தேர்வு பற்றி விரிவான ஆலோசனை மற்றும் ஆண்டறிக்கையை என்.சி.டி.இ. கூட்டத்தில் அளிக்க வேண்டும்.
போட்டித் தேர்வு: இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தேர்வின் மூலமாக 2,222 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வு கடந்த ஜனவரி 7ல் நடைபெற இருந்த நிலையில், அதன் பின் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பிப்ரவரி நான்காம் தேதிக்கு போட்டித் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கூடுதலாக ஒரு மாதம் ஆசிரியர்களுக்கு தேர்வுக்கு தயாராக நேரம் கிடைத்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர்கள் முழு வீச்சில் தேர்வுக்கு தயாராகியுள்ளனர். தற்போது தேர்வுக்கு சில தினங்களே உள்ளதால் தற்போது இறுதிக் கட்டத் தயாப்பில் உள்ளன. தற்போது தேர்வுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளையும் தேர்வு வாரியம் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் (பிப்.4) ஞாயிற்றுக்கிழமை 130 மையங்களில் போட்டித் தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 41,485 ஆசிரியர்கள் இந்த போட்டி தேர்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்தத் தேர்வில் வெற்றி பெறும் ஆசிரியர்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.