WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 6, 2024

இஸ்ரோ உங்களை அழைக்கிறது..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு nrsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன. தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியர் பிரிவில் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் 7, ஜியோபிசிக்ஸ் 4, மண் அறிவியல் 4, நீர்வளம் 6, மருத்துவ அதிகாரி 1, செவிலியர் 2, நுாலக உதவியாளர் 3 உட்பட மொத்தம் 41 இடங்கள் உள்ளன. பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் எம்.இ., / எம்.டெக்., / எம்.எஸ்சி., / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணியிடங்களுக்கான வயது விவரம்: 12.2.2024 அடிப்படையில் 18 -28, 18 - 30, 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய முறைகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ. 750 கட்டணம் செலுத்தவேண்டும். இதிலிருந்து பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் முழுவதும் திருப்பித் தரப்படும். மற்ற பிரிவினருக்கு ரூ. 500 திருப்பி அளிக்கப்படும்.

கடைசிநாள்: விண்ணப்பங்களை அனுப்ப 12.2.2024 மாலை 5:00 மணி கடைசி நாளாகும். இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு nrsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.