தமிழக பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச்சில் நடக்கின்றன. இவற்றில், 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்வுத்துறை சார்பில், நேற்று முன்தினம் திருச்சியில், உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், பள்ளிக்கல்வி மற்றும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் மகேஷ், துறை செயலர் குமரகுருபரன் ஆகியோரும் ஆலோசனை வழங்கினர்.
அப்போது, பொது தேர்வில் கடந்த ஆண்டு நடந்த முறைகேடு போன்று, இந்த ஆண்டு நடக்காமல், எந்த இடத்திலும் குழப்பம் இன்றி, தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
தேர்வில் முறைகேடுகள் இல்லாத அளவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
தேர்வுத்துறை விதிகளை தேர்வின்போது முறையாக பின்பற்ற, வேண்டும்.
புகார்கள் எழுந்தல், கண்காணிப்பாளர் மட்டுமின்றி, மையத்தை நிர்வகிக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.