WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 9, 2024

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ல் திறப்பு.

தமிழக மாநிலத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பருவத் தேர்வுகள் விடுமுறை முடிந்த பின்னர் வரும் ஜுன் 19-ம் தேதி திறக்கப்படும் என தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல் என்பது தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் பட்டியலாகும். தற்போது தமிழ்நாட்டில் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகள் (Constituent College) உள்பட மொத்தம் 164 கல்லூரிகள் சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் எஸ். கார்மேகம் தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

023-2024-ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து, அதற்கேற்ப கல்லூரி இறுதி பணி நாளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று இதன் மூலம் அறிவிக்கிறோம். இதைத் தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் (2024-2025) கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19-ந்தேதி திறக்கப்பட வேண்டும். மேலும் அதற்கு முன்னதாக இளநிலை வகுப்புகளுக்கான சேர்க்கை தொடர்பாகவும் அறிவிப்பு செய்யவேண்டும். இவ்வாறு தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநர் எஸ். கார்மேகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து தேர்தல் நடைமுறைகள் ஜூன் 6-ம் தேதி நிறைவடைகின்றன. இதனால்தான் ஜூன் 19-ல் தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 காலி இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.