WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 16, 2024

25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்.

 தமிழகத்தில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை பெற மாணவச் செல்வங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்ற தகவலை தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்புப் பலகையில் பெரிதாக வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://tnschools.gov.in/rte/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம். இதுதொடர்பான அறிவிப்பு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியாகியுள்ளது.


நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இலவச இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 25 சதவீத இலவச இடஒதுக்கீட்டின் கீழ் சேரும், மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இணையதள வழியாகவோ, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வட்டார வள மைய அலுவலகங்களையோ தொடர்புகொள்ளலாம். இந்த விண்ணப்பத்துக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்நிலையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பணிகள், ஏப்ரல் 25-ம் தேதிக்கு மேல் தொடங்க உள்ளன. இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளன. இதற்காக மாணவச் செல்வங்களின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். மேலும், அந்தந்தப் பள்ளிகளில் இதற்கான விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டை பள்ளி நிர்வாகங்கள் தவறாது வழங்க வேண்டும் என்று தமிழக கல்வித்துறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://tnschools.gov.in/rte/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.