WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 4, 2024

அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை இடமாற்றம் செய்ய உத்தரவு.

 


அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:



தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளின் வளாகங்களில் முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.


இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள கல்வி அலுவலகங்களை உடனடியாக வேறு வாடகை கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.


அதற்கு பொதுப்பணித் துறை அறிவுறுத்தும் வாடகையை நிர்ணயம் செய்து உரிய கருத்துருவை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று துறையின் செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வி அலுவலகங்களை பொதுப்பணித் துறையால் நிர்ணயிக்கும் வாடகை அடிப்படையில் இடமாற்றம் செய்துவிட்டு அதன் அறிக்கையை உடனடியாக இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து 2024-25-ம் கல்வியாண்டு முதல் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகங்களில் செயல்படக் கூடாது. இதை முறையாக பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.