WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 3, 2024

மே 5ல் நீட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு.

 

மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை இத்தேர்வு நடக்க இருக்கிறது.14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. மொத்தம் 24 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தெந்த நகரங்களில் தேர்வு மைய கூடங்கள் உள்ளது என்ற விவரம் கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. https://exams.nta.ac.in/NEET என்ற வெப்சைட்டில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பெறலாம்.

ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 அல்லது neetnta.ac.in இணையதளத்தில் புகார் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.