விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் 19 ஆயிரத்து 638 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.41 ஆகும்.
விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 121 அரசு பள்ளிகள், 74 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 735 மாணவர்கள், 11 ஆயிரத்து 229 மாணவிகள் உட்பட 21 ஆயிரத்து 964 பேர் தேர்வெழுதினர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் வெளியிட்டார்.
மாவட்டத்தில், 9,138 மாணவர்களும், 10 ஆயிரத்து 500 மாணவியர் என 19 ஆயிரத்து 638 பேர் தேர்ச்சி பெற்று, மாவட்டத்திற்கு 89.41 சதவீதம் தேர்ச்சி சதவீதத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். 1,597 மாணவர்கள், 729 மாணவியர் உட்பட 2,326 பேர் தேர்ச்சி பெறவில்லை.
மாணவர்கள் 85.12 சதவீதமும், மாணவிகள் 93.51 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 26வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்வில், கடந்தாண்டு 84.51 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை பெற்று, மாநில அளவில் 35வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டம் கூடுதலாக 4.29 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு உயர்ந்துள்ளது.
அரசு பள்ளியின் தேர்ச்சி 87.06 சதவீதமாகும். மாநில அளவில் 18வது இடத்தில் அரசு பள்ளிகள் உள்ளது. இதில், கடந்தாண்டு அரசு பள்ளிகள் 80.07 சதவீதத்தை பிடித்து, மாநில அளவில் 32வது இடத்தை பிடித்திருந்தது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி மதிப்பெண்ணை 14 அரசு பள்ளிகளும், 3 நிதியுதவி பெறும் பள்ளிகளும், 36 சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 53 பள்ளிகள் பிடித்துள்ளது.
கடந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில் 3 அரசு பள்ளிகளும், 1 நிதியுதவி பள்ளியும், 33 சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 37 பள்ளிகள் 'சென்டம்' தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி முடிவுகளை வெளியிட்ட சி.இ.ஓ., கூறுகையில், 'கடந்தாண்டை விட இந்தாண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்தாண்டில் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் முதல் 10 இடங்களுக்குள் வர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு பள்ளிகள் அதிகம், கல்வியில் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் உள்ளது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் இந்த மாவட்டத்தில் முதலில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.
தேர்ச்சி விழுக்காடு மட்டுமே முக்கியமில்லை. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என பெற்றோர்கள், மக்களிடத்தில் விழிப்புணர்வு செய்யும் வகையில், நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீத விபரம் கொண்ட விளம்பர பதாகைகளை அரசு பள்ளிகளின் அருகே வைத்து மாணவர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே நேரம், சில தனியார் பள்ளிகளில் அரசு விதிகளை மீறி முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்களோடு விளம்பர பதாகை வைத்துள்ளதாக புகார் வந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்து அந்த விளம்பர பதாகைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.