ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளை தொடர்ந்து, எட்டாம் வகுப்பு பாடத்திலும், கருணாநிதி குறித்த பாடம் இடம் பெற்று உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பள்ளி பாடப் புத்தகங்களில், கருணாநிதி வாழ்க்கை வரலாறு குறித்த பாடம் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகள் பாடமாக சேர்க்கப்பட்டன.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், உரைநடை பகுதியில், 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில், கருணாநிதி பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது.
குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என்ற குறுந்தலைப்புகளின் கீழ், ஐந்து பக்கத்திற்கு அவர் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், பெண் உரிமை சார்ந்த சட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், கருணாநிதி பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அதன் விபரம்:
பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்காக, 1956ம் ஆண்டு ஹிந்து வாரிசு உரிமை சட்டம் திருத்தப்பட்டு, 1989ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தம், 'ஹிந்து வாரிசு உரிமை சட்டம் - 1989' என்று அழைக்கப்படுகிறது.
இந்த சட்டத்தின் வழியாக, தமிழகத்தில் ஹிந்து கூட்டுக்குடும்ப சொத்தில், பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதில், தமிழகம் முனைப்புடன் செயல்படுகிறது என்பதற்கு, 1989ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் ஓர் உதாரணமாகும். பின்னர் தேசிய அளவில், இத்தகைய திருத்தம், 2005ல் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டசபையில் கருணாநிதி பேசும் படமும் இடம்பெற்று உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.