WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 23, 2024

'துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுப்பு சரியே.

 

கடந்த, 1988க்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில், 2011ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக்கோரி, 1995க்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த அரசாணை பலன்களை வழங்க உத்தரவிட்டார். ஆனால், 1988 ஜூன் முதல் 1995 டிசம்பர் வரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியவில்லை என்று கூறி, அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது.

இதை எதிர்த்து, 1995ம் ஆண்டு டிசம்பருக்கு பின் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று, தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, ''2988 முதல் 1995 வரை பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே, இந்த அரசாணை பொருந்தும்.

இந்த காலவரம்பு இல்லாமல், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11,239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது, அரசுக்கு 278 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும்.

இந்த வழக்கை பொறுத்தவரை, மேல்முறையீடுதாரர்கள் அனைவரும், 1995 டிசம்பருக்கு பின் பதவி உயர்வு பெற்று உள்ளனர். இதை கருத்தில் கொண்டே, மேல்முறையீடு தாரர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது,'' என்றார்.


இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:



கடந்த 1995 டிசம்பருக்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று காலவரம்பு நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த காலவரம்புக்கு பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற உரிமையில்லை. எனவே, 1995ம் ஆண்டுக்கு பின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.