WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 1, 2025

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்புகள் - 4 வயது முதல் கலந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கோடைக்கால பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் பொது நூலக இயக்ககத்தின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2025 வகுப்புகள் மே 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. பாரம்பரிய விளையாட்டுகள் முதல் பல்வேறு வகையான திறன் விளையாட்டுகள் போன்ற பல விளையாட்டுகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் இறுதி ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. கோடை விடுமுறையை பள்ளி மாணவர்கள் பல்வேறு வகையில் சிறப்பாக செலவழித்திட திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில், குழந்தைகள் கோடை விடுமுறையை சிறப்பாக கொண்டாடும் வகையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடைக் கொண்டாட்டம் 2025 நடத்தப்படுகிறது. மே 1-ம் தேதி முதல் தொடங்கி மே 31-ம் தேதி வரை பல்வேறு விளையாட்டுகளுக்கான கோடை பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளி கோடை விடுமுறை
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வை எழுதிய 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15 வரை தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கி, 3-ம் வகுப்பு வரை ஏப்ரல் 11 தேதியும், 5-ம் வகுப்பு வரை 17-ம் தேதியுடன் முடிவடைந்தது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. தொடர்ந்து, 38 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில், கோடை விடுமுறையை சிறப்பாக கழித்திடவும், மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் பள்ளிக்கல்வித்துறையின் அண்ணா நூற்றாண்டு நூலகம் அறிவித்துள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுறை 102-வது பிறந்த நாள் நினைவாக துவங்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் 8 அடுக்குகள் கொண்டு ஏசி வசதியுடன் கட்டப்பட்டது. நூலகத்திற்கான அனைத்து பிரிவுகள் கொண்டுள்ளது.மேலும், குழந்தைகளுக்கான தனிப்பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகிய வசதியும் கொண்டுள்ளது.

இதில் குழந்தைகளுக்கான பிரிவில் குழந்தைகள் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு கோடை கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோடை கொண்டாட்டம் 2025
அண்ணா நூற்றாண்டு நூலக குழந்தைகள் பிரிவில் 4 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மே 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோடைக்கால திருவிழா நடத்தப்படுகிறது.

நூல் வாசிப்பு, கலை மற்றும் கைவினை, சிறார் திரைப்படம், விளையாட்டு கணிதம், பொம்மலாட்டம், ஓவியப்பயிற்சி, தமிழ் வார்த்தை விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி, வினாடி-வினா, சதுரங்க போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள், நிகழ்வுகள் காலை 11 மணி முதல் 12.30 மணி நடைபெற உள்ளது.

ஆர்வமுள்ள பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகள் பிரிவு, முதல் தளத்தில் நடைபெறும் கோடை கொண்டாட்டத்திற்கு குழந்தைகளை அனுப்பி வைக்கலாம். மேலும், நூலக குறித்த விவரங்களை https://www.annacentenarylibrary.org/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
கோடைக்கால விளையாட்டு பயிற்சிகள்
இவையில்லாமல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பள்ளி மாணவர்களுக்கான இலவச கோடைக்கால பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது. ஏப்ரல் 25 முதல் மே 15 வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு இந்த முகாமில் தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, டென்னிஸ், மட்டைபந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், டைவிங்க், வளைகோல்பந்து மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சிமுகாமில் 18 வயதிற்குட்பட்டமாணவ /மாணவிகள் கலந்துகொள்ளலாம். இது தொடர்பான இதர விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703480) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.