WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 30, 2024

டிபிஐ வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம்.

 

ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை.

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்பதை ரத்து செய்து தமிழக அரசு கொள்கை முடிவு ஒன்றை அறிவிக்க வேண்டும் என தேனிமாவட்டம் கம்பத்தில் நேற்று நடந்த நலநிதி விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தமிழக முதல்வர் உறுதியளித்தார். இதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.

ஆசிரியர்களின் பதவி உயர்வு ஒன்றிய அளவிலான முன்னுரிமை இருந்தது. அதை சமீபத்தில் மாநில அளவிலான முன்னுரிமை என்று அறிவித்துள்ளனர். இதனால் 90 சதவீத ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு என்ற உத்தரவை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. தமிழக அரசும் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த விஷயத்தில் கொள்கை முடிவு ஒன்றை அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். கடந்த 9 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனங்கள் இல்லாமல் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகிறது. உடனடியாக அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வருமான வரித்துறைக்கு என தானாகவே பிடித்தம் செய்யும் உத்தரவு என்பது தனி மனித உரிமைக்கு எதிரானது என கருதுகிறோம். எனவே பழைய முறையில் வருமான வரி தாக்கல் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்களின் உயர்கல்விக்கான அனுமதி வழங்கி, ஊக்கத்தொகையை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மே 5ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பப்பதிவு துவக்கம்.


மே 6ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5 முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தமிழக அரசு திடீர் நிபந்தனை.

 

Monday, April 29, 2024

ஓய்வூதிய விவகாரம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி.



பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் சார்பில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மே 10ம் தேதி பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு.



பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு பெற்றது. மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.

Sunday, April 28, 2024

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு - தகுதி பட்டியலில் 330 பேர்.

 வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான 330 அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு.

 அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு.

 

சிவில் சர்வீஸ் தேர்வு: தொடர்ந்து சரியும் தமிழக மாணவர் தேர்ச்சி விகிதம்.

 

Thursday, April 25, 2024

மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம்: ஆதரவும்...! எதிர்ப்பும்....!

 

கோல்கட்டா:
மேற்கு வங்கத்தில் 26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கப்பட்ட உத்தரவிற்கு முதல்வர் மம்தா மற்றும் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், பணம் கொடுத்து குறுக்கு வழியில் அரசு பணிகளில் சேர்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனக்கூறி உள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, 2016ல் தேர்வு நடத்தப்பட்டது. மாநில ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

26 ஆயிரம் பணி நீக்கம்

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் நடைபெற்றதால், மேற்கு வங்க அரசால், 2016ல் நடத்தப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு செல்லாது. முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 26,000 பேர், இதுவரை பெற்ற சம்பளத்தை, 12 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும்' என உத்தரவிட்டது.

ஆசிரியர் நியமன தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பும், ஆதரவும் வலுத்து வருகிறது.

யாரெல்லாம் எதிர்ப்பு?
இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் கூறியதாவது:

ஆசிரியர்கள் வேலையை இழந்துள்ளனர். வட்டியுடன் சம்பளத்தை திரும்பிச் செலுத்துதல் ஆகியவை ஏற்புடையதல்ல. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனிதாபிமானத்துடன் உத்தரவு பிறப்பித்து இருக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளன.

சட்ட விரோதம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
நீதித்துறையில் பா.ஜ., தலைவர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்துகின்றனர். ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செயல்முறையை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது சட்ட விரோதமானது. வேலை இழந்தவர்களுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
சம்பளத்தை திருப்பி கேட்பதா?

அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் கூறியதாவது:
முறைகேடு அடிப்படையில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டாலும், ஊதியத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கூறுவது சரியல்ல.அவர்கள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பளத்தை திருப்பி கொடுக்க சொல்வதை ஏற்க முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆதரவு
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூறியதாவது:

அரசு பணிகளில் ஊழல் என்பது புதிது அல்ல. முறைகேடான வழியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் நியமனம் செல்லாது என நீதிபதிகள் துணிச்சலாக அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். குறுக்கு வழியில் சட்டவிரோதமாக பணியில் சேர்பவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என சட்டப்பூர்வமாக உரிமை கோர முடியாது.

முறைகேடுகள்

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற முறைகேடுகள் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பணம் கொடுத்து குறுக்கு வழியில் அரசு பணிகளில் சேர்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

குறுகிய கால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை.

நம்நாட்டில் திறந்தநிலை, தொலைதூர மற்றும் இணைய வழிக் கல்வி வாயிலாக கற்று தரப்படும் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும்.

டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு: குரூப்-2 பணிகளுக்கு நேர்முக தேர்வு கிடையாது.

 

Monday, April 22, 2024

5ஆம் வகுப்பு வரை இந்த பாடம் கட்டாயம் – ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிஜிட்டல் வழிக் கல்வி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு உத்தரவு.