WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 22, 2024

5ஆம் வகுப்பு வரை இந்த பாடம் கட்டாயம் – ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிஜிட்டல் வழிக் கல்வி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு உத்தரவு.

மத்திய அரசு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்ற நவீன டிஜிட்டல் வழி வகுப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக கிராமப்புறங்களில் இணைய இணைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.


இந்த பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெற இருக்கிறது. அதன்பின் புதிய கல்வி ஆண்டில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனிமேஷன் வகை வீடியோக்களை பாடங்களை நடத்துவதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கான பாடங்கள் மணற்கேணி என்ற செயலியில் இருப்பதாகவும் அதனை பதிவிறக்கி பாடங்களை நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.