WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 22, 2024

நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

 நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் (முனைவர் படிப்பு) சேரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும். இந்த பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர்வதற்கு முதுகலை பட்டம் அவசியம் என்ற விதிகள் இருந்தன.

இந்நிலையில் 'நெட்' தேர்வு எழுதுவதற்கும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு(யுஜிசி) தற்போது தளர்த்தி உள்ளது.

இதனால் 4 ஆண்டு பயிலும் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் நேரடியாக பிஎச்.டி. (முனைவர்) படிப்பில் சேர்து பயில முடியும். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார்

4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேர்வதற்குரிய வகையில் தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவர்கள் 'நெட்' தேர்வு ம்எழுதலாம். அதே நேரத்தில் அவர்கள் படித்த 4 ஆண்டு படிப்பில் அவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக வந்துள்ளது. 'கிரேடு' முறையாக இருந்தால், 75 சதவீத மதிப்பெண்களுக்கு சமமான 'கிரேடை' அந்த மாணவ, மாணவிகள் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பட்டப்படிப்பில் அவர்கள் என்ன பாடம் படித்து இருந்தாலும், பிஎச்.டி. படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுக்க மாணவச் செல்வங்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் (கிரீமி லேயர் அல்லாத பிரிவினர்), மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வும் இந்தப் படிப்பில் சேர்வதற்கு உண்டு இவ்வாறு அவர் கூறினார். இந்த அறிவிப்பால் மாணவச் செல்வங்கள் குஷியடைந்துள்ளனர். 4 ஆண்டு படிப்பு படித்து விட்டு அவர்கள் நேரடியாக பிஎச்.டி. சேர முடியும் என்பதால் அவர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.