தமிழக நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அந்த அரசின் சார்பாக 19 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.
தமிழக நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அந்த அரசின் சார்பாக 19 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.
வயது: புதுச்சேரி அரசின் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.06.2014 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும் 32
வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டீச்சர் எஜூகேஷனில் டிப்ளமோ படிப்பு அல்லது 2 வருடம் படிக்கக் கூடிய பேஸிக் டீச்சர் டிரைனிங்கில் சான்றிதழ் படிப்பை என்.சி.டி.இ., அங்கீகாரத்துடன் முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பை பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை முடித்த பின்னால் படித்திருக்க வேண்டும். பிளஸ் 2 அளவிலான படிப்பு வரை தமிழை ஒரு மொழிப் பாடமாகவும் படித்திருக்க வேண்டும். இதனுடன் சி.பி.எஸ்.இ., அல்லது தமிழக அரசு நடத்தும் டீச்சர்ஸ் எலிஜிபிலிடி டெஸ்ட் (டி.டி.இ.டி., அல்லது டி.என்.டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MORE Education news on pls vist www.kalvikkuyil.blogspot.in
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் தங்கள் முழுமையான விபரங்களை உள்ளடக்கிய பயோ-டேட்டா படிவத்துடன் பிறப்பு சான்றிதழ் அல்லது பிறந்த தேதியை உள்ளடக்கிய பள்ளித் தேர்வு வாரியம் வழங்கும் சான்றிதழ் நகல் உள்ளிட்ட இதர ஆவணங்களின் நகலுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Director of School Education,
Perunthalaivar Kamarajar Centenary Educational Complex,
100 Feet Road, Anna Nagar,
Puducherry - 605 005
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2014இணையதள முகவரி: <https://py.gov.in/citizens/recruitments/DSE10062014.pdf>
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.