திருச்சி:
வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் தமிழ்செல்வி வெளியிட்ட அறிக்கை:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2014ம் ஆண்டு, ஜூன், 30 தேதியில், ஐந்து ஆண்டு முடிவடைந்தவர்கள் தகுதியுடையவர்கள். பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயின்று, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத, மற்றும் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவருக்கும், 2014ம் ஆண்டு, ஜூலை, 1ம் தேதி முதல், 31ம் தேதி வரை (முற்பகல் மட்டும்) உதவிதொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை, திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவகலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து, 2014ம் ஆண்டு, ஜூன், 30ம் தேதியுடன், ஓராண்டு முடிவடைந்த, பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாட்களில், விண்ணப்படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி.,மற்றும் எஸ்.டி., பிரிவினர், 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர், 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்.
எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், முறையாக சேர்ந்து பயிலுபவராக இருக்க கூடாது. தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்விச்சான்றுகள் மற்றும் குடும்ப அட்டையை, வேலை வாய்ப்பு அலுவலர் பார்வைக்கு அளித்து, விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து, உதவித்தொகை தொடர்ந்து பெறும் பயனாளிகள், 2014-15ம் நிதியாண்டுக்கான சுயஉறுதி மொழி ஆவண படிவத்தை, பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
More Employment news very soon at. www.kalvikkuyil.blogspot.com
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.