நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில், 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு, தமிழ கம் முழுவதும் உள்ள, உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளித்து, தேர்வு நடத்தி மாணவர்க ளுக்கு கற்றுத்தர அனுமதிக்க, திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை உத்தரவு படி, தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்பட, 40 வகை விளையாட்டுகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இவற்றில் சில விளையாட்டுகளில் மட்டும் மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. உயர்கல்வி செல்லும் போது, 20 க்கும் குறைவான விளையாட்டுகளிலே, மாணவர்கள் ஆர்வம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு, உபரணங்கள் இன்மை, போதிய மைதான வசதி, ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணமாக கூறப்படுகிறது. இதை தவிர்க்க, குறைந்த மைதான வசதி தேவைப்படும் விளையாட்டுகளான, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, பென்சிங், சைக்கிளிங், பீச் வாலிபால், கேரம், செஸ், டென்னி காய்ட் உள்பட 13 வகை புதிய விளையாட்டுகளை, நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது. இந்த விளையாட்டுகள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்களுக்கு சென்னை, கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில், முதற்கட்ட சிறப்பு பயிற்சி, கடந்த வாரத்தில் முடிவடைந்தது. ஒரு விளையாட்டுக்கு மாவட்டத்துக்கு, ஐந்து உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் வீதம், தமிழகம் ௧௬௦ பேருக்கு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட பயிற்சியை அடுத்து, விரைவில் அடுத்த கட்ட பயிற்சி அளித்து, ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மண்டல விளையாட்டு இயக்கக அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி, முதன்மை உடற்கல்வி ஆய்வகத்தின் உதவியோடு, ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பயிற்சி முடிந்ததும், தேர்வு நடத்தப்படும். இதில், 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும், ஆசிரியர்களுக்கு முதல் கிரேடு தரத்திலும், 60 முதல் 70 மதிப்பெண் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2 ம் கிரேடு தரத்திலும், 50 மதிப்பெண் எடுத்தால், 3ம் கிரேடு தரத்திலும் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் பெறும் ஆசிரியர்கள் மட்டுமே, புதிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கவும், போட்டிகளின் போது நடுவர்களாக பணியாற்றவும், பள்ளி கல்வித்துறை மூலம் அனுமதிக்கப்படுவர்,'' என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.