கோவை:
பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில், மாணவர்கள் படிக்கும் தொடக்க பள்ளிகளை மூட, அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, மாவட்டந்தோறும் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையின் கீழ், 23 ஆயிரத்து 815, அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இதில், 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆங்கில வழி கல்வி, தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, கற்றல் முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு தொடக்கப்பள்ளிகளில், 10 ஆண்டுகளாக, மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது, மலையோர மற்றும் கிராமப்புற பகுதிகளில், அதிகரித்து வருவதாக, கல்வியாளர்கள் தெரிவித்தனர். இதில், தற்போது தமிழகம் முழுவதும், 10 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும், 1268 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை மூடிவிட்டு, அந்த மாணவர்களை அருகில் உள்ள, மற்ற பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது குறித்து, கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் பட்டியல் தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன. கோவை மாவட்டத்தில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல், வட்டார உதவி கல்வி அலுவலர்கள் வாயிலாக சேகரிக்கும் பணி நடக்கிறது. இந்த பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலே, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பள்ளிகளை மூடுவது தொடர்பாக, எவ்வித அறிவிப்பும் இல்லை,'' என்றார்.
Saturday, July 5, 2014
பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் துவக்கப்பள்ளிகள் மூடல்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.