WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 7, 2014

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்


மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.




மரக்காணம் அரசு உயர்நிலைப் பள்ளி, கடந்த 1978ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் ஆயிரத்து 640 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 29 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளியில் 14 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தனியார் தொண்டு நிறுவனம் 14 ஆசிரியர்களை நியமனம் செய்து, மாணவர்களுக்கு பயிற்றுவித்தது.இதன் காரணமாக கடந்தாண்டு தேர்வுக்கு சென்ற மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு தொண்டு நிறுவனம் நியமனம் செய்த 14 ஆசிரியர்களை, திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுத செல்லும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவது, ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.