WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 8, 2014

ரெயில் பயணிகளுக்கு புதிய சலுகைகள்: செல்போனில் டிக்கெட் எடுக்கலாம்?

புதுடெல்லி, ஜூலை. 8– பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பின்பு முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. இன்று ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜனதா அரசின் முதலாவது ரெயில்வே பட்ஜெட்டை ரெயில் மந்திரி சதானந்த கவுடா பகல் 12.10 மணிக்கு தாக்கல் செய்தார்.
அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் வருமாறு:–
ரெயிலில் இதுவரை பயணம் செய்யாத மக்களும் இந்தியாவில் வாழ்கின்றனர். ரெயில்வே துறை இன்னும் ஏராளமான மக்களை சென்றடையவில்லை. சரக்கு வரத்து தற்போது 31 சதவீதம் மட்டும்தான் உள்ளது.  கடந்த காலங்களில் திட்டங்கள் அறிவிக்கப் பட்டனவே தவிர அவற்றை நிறைவேற்றவில்லை. 382 திட்டங்களை செயல்படுத்த 1.82 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. பயணிகள் கட்டணத்தால் ஏற்படும் இழப்பு ஆண்டு தோறும் அதிகரிக்கிறது. ரெயில்வேயை தினமும் 2.3 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் வேறு ஆதாரங்கள் மூலம் நிதி திரட்டப்படும். ரெயில்வேயை நவீன மயமாக்க ரூ.5 லட்சம் கோடி தேவை. ரெயில்வே நவீனப்படுத்தும் வைர நாற்கர திட்டத்துக்கு ரூ.9 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இதேபோல் தனி சரக்கு ரெயில் பாதை அமைக்க ரூ.9 லட்சம் கோடி தேவைப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த நடைமேடைக்கும் செல்ல பேட்டரி கார் வசதி செய்யப்படும். எல்லா ரெயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை வசதி செய்யப்படும். முக்கிய ரெயில் நிலையங்களில் தனியார் ஒத்துழைப்புடன் லிப்ட் வசதி செய்யப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.