WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 6, 2014

வேலை வேண்டுமா?- பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டதாரிகளுக்கு வேலை.

தேசிய வங்கியான பாங்க் ஆஃப் பரோடாவில் 300 பட்டதாரிகளுக்கு ஓர் ஆண்டு பட்டயப்படிப்புடன் கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன. வெற்றிகரமாக பட்டயப் படிப்பை முடித்தவர்கள் வங்கியின் கிளைகளில் புரோபேஷனரி ஆபீஸர்களாக நியமிக்கப்படுவார்கள்.

தகுதி:
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் பொதுப் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும் எஸ்.சி./எஸ்.டி./ மாற்றுத்திறனாளி/ பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

வயது:
16.07.2014 அன்று 20லிருந்து 28க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி./ ஓ.பி.சி./ மாற்றுத்திறனாளி போன்றவர்களுக்கு அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை உண்டு. கட்டணம்: எஸ்.சி./எஸ்.டி./ மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 50. பிறருக்கு ரூ. 550.
விண்ணப்பித்தல்:
  1. விண்ணப்பிக்க விரும்புவோர் பாங்க் ஆஃப் பரோடாவின் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய முகவரி: http://ibps.sifyitest.com/bobpojun14/ தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்த மாணவர்கள், ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர் காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஓர் ஆண்டு பட்டயப் படிப்புக்கான கட்டணம் ரூ. 3.45 லட்சம். இந்தக் கட்டணத்திற்காக பாங்க் ஆஃப் பரோடா வங்கியே கல்விக் கடன் வழங்கவும் வசதி செய்துள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:
16.07.2014.
More Employment news. Please. Vist www.kalvikkuyil.blogspot.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.