WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 15, 2014

டி.இ.டி., வெயிட்டேஜ் மதிப்பெண்; சீனியர் ஆசிரியர்கள் புலம்பல்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.இ.டி.,) நடத்திய பட்டதாரி, இடைநிலை
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கபடும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் சீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இறுதித் தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது.

இதற்கு முன் நடந்த டி.இ.டி.,தேர்வில் காலி பணியிடங்கள் அதிகமாக இருந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் குறைவாக இருந்தனர். இதனால் தகுதி மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது. தற்போது தேர்ச்சி பெற்றோர் அதிகமாக உள்ளனர். இது போன்ற காரணங்களுக்காக "வெயிட்டேஜ்' மதிப்பெண் கொண்டுவரப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையில்,டி.இ.டி.,தேர்வில் பெற்ற மதிப்பெண், பிளஸ் 2, டிகிரி, பி.எட்., ஆகிய கல்வித் தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு, டி.ஆர்.பி.,வகுத்த விதிமுறைப் படி, மதிப்பெண் வழங்கி மொத்தமாக சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர் வேலை வழங்கப்படும். இந்த முறையால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2, டிகிரி, உள்ளிட்ட படிப்புகளை முடித்த சீனியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம், கடந்த காலங்களில், பிளஸ் 2 தேர்வில் ஆயிரம் மதிப்பெண் எடுப்பதே அரிதாக இருக்கும். 800 மதிப்பெண் பெற்றவர்கள் கூட பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் 2, டிகிரி முடித்தவர்கள்,தேர்வு முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் தற்போது அதிக மதிபெண் பெற்றுள்ளனர். டி.இ.டி.,.தேர்வு எழுத வேலைவாய்ப்பு பதிவு முக்கியம். ஆனால், "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால், கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்து டி.இ.டி.,தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் வேலைவாய்ப்பிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன் முடித்தவர்கள், டி.இ.டி.,தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் போது பின்னுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், சீனியர்களுக்கு வாய்ப்பு குறைவும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் புலம்பி வருகின்றனர்.www.kalvikkuyil.blogspot.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.