WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 23, 2017

முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பாடத்திட்டம் அடியோடு மாற்றம் : தமிழக அரசு புதிய அரசாணை.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மூன்றாண்டுகளில் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டங்கள் அடியோடு மாற்றியமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாற்றியமைக்கப்படும் இந்த பாடத்திட்டம் குறித்த அரசாணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

அதன் விபரம் வருமாறு: 
தமிழக கல்வி வரலாற்றில் இடைநிலைக்கல்வி பல்வேறு மாற்றங்களை கடந்து வந்துள்ளது.. தமிழகத்தில் 1989 - 90 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1 பாடத்திட்டமும், 1990-91 ஆம் ஆண்டு பிளஸ் 2 பாடத்திட்டமும், 1995-96 ஆம் ஆண்டு பிளஸ் 1 பாடத்திட்டமும், அதைத்தொடர்ந்து 1996-97 ஆம் ஆண்டு பிளஸ்2 , 2003-4 ஆம் ஆண்டு பிளஸ் 1, 2004-5 ஆம் ஆண்டில் பிளஸ் 2 பாடத்திட்டமும் மாற்றம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நான்கு பாடவாரியங்கள் தனித்தனியாக இயங்கி வந்தன, பொதுப்படவாரியம் என்ற முறையில் இவை ஒருமுகப்படுத்தப்பட்ட 2010-11 ஆம் ஆண்டு ஒன்று முதல் 6 ஆம் வகுப்பு வரையும் 2011-12 ஆம் ஆண்டில் 2,3,4,5.7,9 மற்றும் பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றம் செய்து புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு,ஸ 7 ஆண்டுகளும் பிளஸ் 1,மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு 12 ஆண்டுகளும் ஆகியுள்ளன .பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகளில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் கல்வி அமைப்புகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் கல்வியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழு அமைத்து பரிந்துரை வழங்க கோரப்பட்டது,. இந்த வல்லுநர் குழு விரிவாக ஆலோசித்து மூன்று துணைக்குழுக்களை அமைத்து அதன் ஆலோசனைகளை பெற்றது. இந்த குழு சென்ற 11 ம்தேதி கூடி பள்ளிக்கல்வியில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஒரு மனதான தீர்மானங்களை நிறைவேற்றின அதன் விபரம் வருமாறு: தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளுக்கு முன்பும் பிளஸ் 1,2 பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்டது. உலகல அளவில் வளர்ந்து வரும் அறிவியல், சமூக பொருளாதார வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும், மேலும் தமிழக மாணவர்கள் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறத்தக்க வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டியது. பள்ளிக்கல்வித்துறையின் மிகப்பெரிய கடமையாகும், இதனை செயற்படுத்த ஏதுவாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தற்போதுள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரலாம்,. அப்பாடத்திட்டம் தரமானதாகவும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சிபிஎஸ்சி உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்திற்கு மேலானதாகவும் இருக்கும்படி வடிவமைக்கலாம், அதே நேரத்தில் மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் பாடங்களில் தமிழகத்தின் மொழி, வரலாறு,.பண்பாடு ஆகியவற்றிற்கு மு்ககியத்துவம் அளித்து பாடத்திட்டத்தை உருவாக்கலாம், என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு தீர்மானத்தில், தமிழகத்தில் 12 வகையான தொழிற்கல்வி பாடங்கள் மேல்நிலை வகுப்புகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன, தொழிற்கல்வி பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லவும் வேலைவாய்ப்பினை பெறவும் வாய்ப்புகள் உள்ளன, இந்த பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் அதற்கான திறன்களை முழுமையாக பெற வேணடியதும் வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி சூழலுக்கு ஏற்றவகையில் தொழிற்கல்விக்கான பாடத்திட்டங்களை மாற்ற வேண்டியதும் அவசியமானதாகும்,. பாடத்திட்டம் மாற்றம் செய்யும்போது தொழில்கல்வி மாணவர்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெறும் வண்ணம் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும், இந்த பணியினை மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , அண்ணா பல்கலைக்கழகம்,மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்ற தொழிற்சார்ந்த பல்கலைக்கழகங்களின் உதவியோடு மேற்கொள்ளலாம் . வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளிகளில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் கணினிப்பாடத்தை பயில்வது அவசியமானதாகும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தற்போதய பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல், கணினிப்பாடம் சேர்க்கப்படாமல்,உள்ளது. புதிய வரைவுப்பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் கணினி பாடத்தை ஒரு பிரிவாக சேர்த்து கற்பிப்பது சார்ந்து பரிசீலிக்கலாம், மேற்கண்ட தீர்மானங்களின் அடிப்படையில் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், பாடத்திட்டங்களை மாற்ற அரசுக்கு கருத்துருக்களை சமர்பித்துள்ளது. பொதுக்கல்வித்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை வகுப்பு வாரியாக மற்றும் பாடவாரியாக வல்லுநர் குழுக்களை அமைத்து பின்வரும் ஆண்டுகளில் மாற்றி அமைக்கலாம், 2018-19 கல்வியாண்டுகளில் 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும் 2019- 20 கல்வியாண்டுகளில் 2,7.10 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் 2020 - 21 ஆம் கல்வியாண்டில் 3,4,5 மற்றும் 8 ஆம் கல்வியாண்டுகளிலும் படிப்படியாக மாற்றியமைக்கப்படும். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாடத்தோடு தகவல் தொழிற்நுட்பவியல், கணினி பாடத்தை இணைத்து கற்பிக்கும் வண்ணம் அதற்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கலாம், தொழிற்கல்வியை பொறுத்தவரை தமிழக சூழலுக்கு எவை ஏற்றது என்பதை கண்டறிய வல்லுனர் குழு அமைத்து அதற்கான பாடநூல் தயாரிக்கவும் இதில் 2017-18 ஆம் கல்வியாண்டில் கண்டறியப்படும் இனங்களில் ஐந்து இனங்களுக்கு 2018-19 கல்வியாண்டு முதல் செயல்படுத்திடவும் மீதமுள்ள இனங்களில் பாதி 2019-20 கல்வியாண்டு மற்றும் 2020-21 ஆம் கல்வியாண்டியிலும் செயல்படுத்திடவும் இன்த பணியினை மாநிலக்கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளலாம். புதிய பாடத்திட்டமா் மற்றும் பாடப்புத்தகங்களை உருவாக்கும்போது கற்றலை மனனத்தின் திசையில் இருந்து படைப்பின்பாதையில் பயணிக்க வைக்க வேண்டும், தோல்விபயம் மற்றும் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யும் தேர்வுகளை உருமாற்றி கற்றலின் இனிமையை உறுதி செய்யும் தருணமாய் அமைத்தல், தமிழர்களின் தொன்மை வரலாறு, வரலாறு பண்பாடு மற்றும் கலை, இலக்கியம்ஸ குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுவதுடன், அவர்கள் தன்னம்பி்க்கையோடு அறிவியல் தொழிற்நுட்பம் கைக்கொண்டு நவீன உலகில் வெற்றி நடை பயில்வதை உறுதி செய்ய வேண்டும், அறிவுத்தேடலை வெறும் ஏட்டறிவாய்க்குறைத்து மதிப்பிடாமல் அறிவுச்சாளரமாய் புத்தகமாய் விரிந்து பரவி வழிகாட்டுதல்,புதுமையான கற்றல், கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வகையில் தகுந்த ஆசிரியர் கையேடுகளையும் மாணவர்களுக்கு செய்முறை கையேடுகளையும் தயாரித்து வழங்கிட வேண்டும். இணைய வழிக்கற்றல் மற்றும் கற்பித்தலை ஊக்குவித்திடும் வகையில் விரிவான கற்றல் மேலாண்மைத்தளம் ஒன்றினை உருவாக்கிடவும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதில் பயன்படுத்தக்கூடிய அலைபேசி செயலிகளை உருவாக்கி செயல்படுத்திடவும் அனுமதி வழங்கப்படுகிறது. பாடத்திட்ட மாற்றத்திற்கு ஏற்றவகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உரிய தொடர்பயிற்சிகள் வழங்கவும் அதற்குரிய விரிவான பயிற்சி கால அட்டவணை மற்றும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு கோரும் கருத்துவருவினை உடன் அரசுக்கு அனுப்புமாறும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். இந்த பணிகள் அனைத்தும் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளுமாறும், இந்தபணிகளை மேற்கொள்வதற்குரிய நிதி ஒதுக்கீடு, அறிவுசார் தேவைகள் தொடர்பாக தனியானதொரு கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறும், பாடத்திட்ட மாற்றத்திற்கு ஏற்ற விதத்தில் ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்குமாறும் பொதுக்கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெற்று பாடத்திட்ட மாற்ற பணிகளை 6 மாதத்தில் முடிக்குமாறும் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார், இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.