5.5 வருடம் வழங்கப்படும் BNYS (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) படிப்பிற்கான 2025-26 கல்வி ஆண்டில் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பங்கள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
BNYS அட்மிஷன் 2025
தமிழ்நாட்டில் மொத்தம் 2 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள், 17 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் மேனேஜ்மெண்ட் இடங்கள் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. இப்படிப்பு மொத்தம் 5.5 ஆண்டுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு வருடம் கட்டாய Rotatory Residential Internship வழங்கப்படும். தமிழ்நாட்டில் சுமார் 2,300 இடங்கள் உள்ளன.
BNYS தகுதிகள்
அரசு மற்றும் தனியார் கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கு இந்தியர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் 31.12.2025 தேதியின்படி, 17 வயதை நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி என்ன?
இப்படிப்பிற்கு நீட் தேர்வு அவசியமில்லை. இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல் உயிரியியல்/ பயோடெக்னாலஜி ஆகியவற்றை கொண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒசி பிரிவினர் 50% மதிப்பெண்களுடன், பிசி பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும், எம்பிசி பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 35% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BNYS கட்டணம் எவ்வளவு?
தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஒரு வருடத்திற்கு கல்வி கட்டணம் ரூ.80,000 சேர்த்து ரூ.1,25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம், ஆய்வக கட்டணம், நூலகம், இணையம், பராமரிப்பு உள்ளிட்ட சேவைக் கட்டண விவரங்களை கல்லூரிகளின் வழியாக அறிந்துகொள்ளலாம். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு விலக்கு உள்ளது.
இதுவே, தனியார் கல்லூரி மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கு அனைத்து கட்டணங்களும் சேர்த்து ஒரு வருடத்திற்கு ரூ.2,50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ள எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி?
BNYS படிப்பில் சேர விரும்புகிறவர்கள் https://tnayushselection.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு கட்டண விலக்கு உள்ளது. சிறப்பு பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் கட்டணமாக ரூ.500 அனைத்து பிரிவினரும் செலுத்த வேண்டும்.
கலந்தாய்வின்போது, அரசு இடங்களுக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும். தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ரூ.10,000 அட்வான்ஸ் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கு பதிவு கட்டணம் ரூ.1,000, ஆன்லைன் கட்டணம் ரூ.1,000 மற்றும் அட்வான்ஸ் கல்வி கட்டணம் ரூ.25,000 செலுத்த வேண்டும்.
கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்
யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது. விண்ணப்பித்தவர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மொத்தம் 3 சுற்று காலந்தாய்வு நடத்தப்படும்.
முக்கிய நாட்கள்
அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மட்டும் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்த பின்னர், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோமதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்பிக்கலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.