தமிழ்நாட்டில் பல்துறைகளில் உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெற்றன. இதற்கான தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வை ஒத்திவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தேர்வு குறித்து முடிவை டிஆர்பி பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தேர்வு ஒத்திவைப்பு குறித்த ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 10-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை உட்பட பல்துறைகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் என மொத்தம் 1,996 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டது.
அறிவிப்பை தொடர்ந்து, ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் பி.எட் பட்டதாரிகள் விண்ணப்பித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தாண்டு டிஆர்பி-யின் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இப்பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
அக்டோபரில் தேர்வு
முதலில் செப்டம்பர் 28-ம் தேதி தேர்வை நடத்த திட்டமிட்ட இருந்த நிலையில், அதே நாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறுவதால், தேர்வர்கள் இரண்டு தேர்வையும் எழுதும் வண்ணம் தேர்வு தேதி அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
3 வாரங்கள் அவகாசம் வேண்டும்
இதனிடையே, புதிய பாடத்திட்டத்தின் கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், தேர்விற்கு தயாராக 3 வாரங்கள் அவகாசம் வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்து தேர்வை ஒத்திவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையில், தேர்விற்கு தயாராக ஏதுவாக முதுகலை பட்டதாரிகள் தேர்வு மேலும் 3 வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் டிஆர்பி முடிவெடுக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆலோசனையில் டிஆர்பி
உயர்நீதிமன்றத்தில் உத்தரவின்படி, முதுகலை ஆசிரியர் தேர்வை ஒத்திவைப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக தேர்வர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸை கோரிக்கை வைத்தனர். அமைச்சரும் தேர்வர்களுக்கு சாதகமாக முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தேர்வை திட்டமிட்டப்படி நடத்துவதா? தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வை ஒத்திவைக்கலாமா? என்ற முடிவு விரைவில் எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு ஒத்திவைக்கப்பட்டால் எப்படி தெரிந்துகொள்ளுவது?
முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்த விவரங்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு தேதி, அட்மிட் கார்டு ஆகியவற்றையும் இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முடிவுகள் வெளியாக சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை எடுத்துகொள்ளப்படலாம் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.